இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து இன்று (12) நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம் பெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.
மேலும், கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மா.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோருடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.