அபரிவிதமான சக்தி தரும் மந்திரம்

இந்த உலகமே இன்று இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் ஒரு இறை சக்திதான். அது எந்த சக்தியாக இருந்தாலும் சரி, அந்த சக்திக்கு உயிர் இருக்கும் வரை தான், இந்த உலகத்திற்கும் உயிர் இருக்கும். இந்த உலகத்தில் உயிர் இருந்தும், உயிர் இல்லாமல் வாழக்கூடிய நிறைய மனிதர்கள் இன்றளவிலும் இருக்கிறார்கள்.

சக்தி இல்லாமல், தெம்பு இல்லாமல், தைரியமில்லாமல், தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்க்கையை நடத்தினால், உயிர் இருந்தும் இல்லாததற்குத்தான் சமம். உங்களுடைய வாழ்க்கையிலும் இதேபோல பிரச்சனை தானா. தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத காரணத்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லையா. துணிச்சல்லோடு பேசக்கூடிய திறமை உங்களிடத்தில் இல்லை, எதற்கெடுத்தாலும் பயத்தோடு வாழ்கிறீர்கள் என்றால் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு, இந்த இரண்டு வரி மந்திரம் உங்களுக்காக மட்டுமே.

இந்த மந்திரத்தை எப்போதெல்லாம் உச்சரிக்கலாம். காலையில் எழுந்த உடனேயே இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். காலையில் எழுந்து இறை வழிபாடு செய்யும்போது, இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மதியம் ஓய்வு எடுக்கும் நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இரண்டு நிமிடம் இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு தூங்கலாம்.

எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஒரு நாளைக்கு 333 முறை இந்த மந்திரத்தை நீங்கள் சொன்னால், எங்கும் இல்லாத சக்தி உங்களுக்குள் வந்துவிடும். அதுதான் பராசக்தியிடம் இருந்து, பாதி சக்தி உங்களுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஒரு நாளைக்கு 333 முறை இந்த மந்திரத்தை நீங்கள் சொன்னால், எங்கும் இல்லாத சக்தி உங்களுக்குள் வந்துவிடும். அதுதான் பராசக்தியிடம் இருந்து, பாதி சக்தி உங்களுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு சக்தி தேவியை, பார்வதி தேவியை, அங்காள ஈஸ்வரியை, ஏதோ ஒரு அம்மனை உங்களுடைய மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனை நினைத்தாலும் தவறு கிடையாது. ஆனால் இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு ஒரு அம்மனை நீங்கள் நம்பிக்கையுடன் வழிபட வேண்டும். அது என்ன அம்மன் என்று தேர்ந்தெடுத்துக் கொள்வது, உங்களுடைய விருப்பம். உங்களுடைய இஷ்ட தெய்வம், அம்மனை தேர்ந்தெடுத்து, அந்த அம்மனிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த மந்திரத்தை சொல்ல தொடங்கலாம். சக்தி தரும் இரண்டு வரி மந்திரம் இதோ.

சக்தி மந்திரம் நானே சக்தி சக்தியே நான். இவ்வளவு சின்ன மந்திரத்திற்கு பின்னால், என்ன சக்தி இருக்கப் போகிறது என்று மட்டும் குறைவாக இந்த மந்திரத்தை எடை போடாதீர்கள். இந்த மந்திரத்தை ஒரு நாள் உச்சரித்தாலே உங்களுக்குள் இருக்கும் தீய எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், தேவையற்ற பயம், மன சஞ்சலம், மனக்குழப்பம் அனைத்தும் வெளியேறிவிடும். இந்த உலகத்தில் எப்படியாவது தைரியமாக வாழ்ந்துவிடலாம், எதிரிகளை துவம்சம் செய்து விடலாம், என்ற சக்தி ஒரு உத்வேகம் உங்கள் மனதிற்குள் பிறக்கும் பாருங்கள்.

இந்த மந்திரத்தை உச்சரிக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது இந்த மந்திரத்தை உச்சரிக்க நேரம் காலமும் பார்க்க தேவை கிடையாது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இந்த மந்திரத்தை சொல்லிக் கொடுங்கள். அவர்கள் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டாலும் அந்த நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர்களுக்கு நிச்சயம் அபரிவிதமான சக்தி கிடைக்கும். சக்தி இல்லாமல் இந்த பூமியில் யாராலும் வாழ முடியாதுங்க. இதை உணர்ந்தவர்களுக்கு இந்த மந்திரம் நிச்சயம் பயன்படும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.