கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம்!

கடுமையான கண் திருஷ்டியும், நமக்கு செலவை உண்டு பண்ணிவிடும். கடுமையான கண் திருஷ்டி நம்முடைய சேமிப்பை கரைக்கும். கையில் இருக்கும் சேமிப்பை கரைத்தால், தானாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும்.

என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது நமக்கு இருக்கும் கண் திருஷ்டி பாதிப்பை நீக்க வேண்டும். அதற்கு செவ்வாய்க்கிழமை நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்மன் தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர்க்கும் துர்க்கை அம்மன் பரிகாரம் செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு உள்ளங்கை அளவு கல் உப்பு போதும். அந்த கல்லுப்பை உள்ளங்கைகளில் இருக்கி பிடித்து கொண்டு, என்னை பிடித்த கண் திருஷ்டி எல்லாம் என்னை விட்டு விலக வேண்டும் என்று, குலதெய்வத்தையும், துர்க்கை அம்மன், மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு, “ஓம் தும் துர்காயை நமஹ” என்று சொல்லி உள்ளங்கையில் இருக்கும் கல் உப்பை தலையை மூன்று முறை சுற்றி அந்த கல்லுப்பை குளிக்கின்ற தண்ணீரில் போடுங்கள்.

அந்த கல்லுப்பு கலந்த தண்ணீரில் செவ்வாய் கிழமை அன்று குளித்து விட வேண்டும். பிறகு வழக்கம் போல உங்களுடைய வேலையை துவங்கலாம். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு, குங்கும அர்ச்சனை செய்து மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். (செவ்வாய்க்கிழமை மாலை துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு கூட இந்த கல்லுப்பு குளியலை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது).

உங்களுடைய கடன் சுமையும் கண் திருஷியையும் குறைய வேண்டும் என்று அம்பாளை வேண்டி, அம்பாள் பாதத்தில் இருந்து ஒரு எலுமிச்சம்பழத்தை கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால் கடனும் குறையும். கண் திருஷ்டியும் குறையும் என்பது நம்பிக்கை. வாரத்திற்கு ஒருமுறை துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து புது எலுமிச்சம்பழத்தை கொண்டு வந்து பூஜையில் வைத்துவிட்டு, பழைய எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் போடவும்.