குணசேகரன் நாடகமாடுவதை கண்டு பிடித்த ஜனனனி கொடுக்க போகும் ஸ்வீட் சர்ப்ரைஸ்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பாத்ரூமிற்கு செல்லும் பைப்பை அடைத்து வைத்துவிட்டு நாடகமாடியதை ஜனனி கண்டுபிடித்துள்ளார்.

எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.

எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.

முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.

ஜனனியை தவிர மற்ற மூன்று பேரும் சமையலறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜனனியும் தனது தாய் விசாலட்சியின் உதவியுடன், குணசேகரன் கொடுமை செய்து வருகின்றார்.

குணசேகரன், விசாலாட்சி இருவரும் தங்களை பிளான் செய்து தான் இவ்வாறு செய்கின்றனர் என்பதை ஜனனி கண்டுபிடித்த நிலையில், விரைவில் குணசேகரனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு வகை தேடி வருகின்றனர்.