ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இல்லத்தில் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வீட்டில் செயல்படுத்துவது பற்றி கீர்த்தி ஜெயகுமார் விளக்குகிறார்.
சன் ரைஸ் பாடத்திட்டம் பெற்றோர்களால் செயல்படுத்தப்படுவது மற்றும் உறவு சார்ந்த விளையாட்டு அம்சம் கொண்டது. இதன் முக்கிய அம்சங்கள்:
சன் ரைஸ் புரோகிராம்
இந்தப் பாடத்திட்டம் அதன் பெயருக்கேற்ப இதை உருவாக்கிய பெற்றோருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. இந்த திட்டம் தற்போது விரிவடைந்து தேவையுள்ள மற்ற குடும்பத்தினரும் பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது.
மாசாசூட்சின் ஷெபீல்டில் உள்ள ஆப்ஷன் இன்ஸ்டிடியூட்டின் அங்கமான ஆட்டிசம் சென்டர் ஆஃப் அமெரிக்காவில் (ஏ.டி.சி.ஏ) காப்மன் தம்பதி பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். சக ஊழியர்கள் உதவியோடு, இவர்கள் பெற்றோர் எப்படி தங்கள் அணுகுமுறையை புரிந்துகொள்ளலாம் என வழிகாட்டுகின்றனர். இதுவே சிகிச்சையின் முக்கிய அம்சம்.
பிணைப்பு மற்றும் உறவை வளர்க்க உதவும் முயற்சியே இது. குறைந்த தூண்டுதல் மற்றும் கனவுச்சிதறல் இல்லாத விளையாட்டு சூழலை உருவாக்கி, குழந்தையைப் பாதுகாப்பாக உணர வைக்கும் முறை இது.
இந்தப் பாடத்திட்டத்தில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் குழந்தையின் பிரத்யேக மற்றும் சுய தூண்டுதல் கொண்ட பழக்க வழக்கங்களில் இணைந்து கொள்கின்றனர். குழந்தை ஆர்வத்தையும் திறனையும் உணர்த்தும் சமூக தொடர்புக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் வரை இது தொடர்கிறது.
குழந்தை சமூக உறவில் இருந்து விலகிச்சென்றால், பயிற்சியாளர் குறுக்கிட்டு குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இணை விளையாட்டு மூலம் குழந்தைக்கான வாய்ப்பை உருவாக்குவார். குழந்தை திறன்களை பெறுவதும் ஊக்குவிக்கப்படுகிறது. கற்றல் செயல்முறையில் தனது முன்னேற்றத்தையும் கவனத்தில் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டப்படி, பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் பழக்க வழக்கங்களை எந்தவித தீர்ப்பும் அளிக்காமல் ஏற்றுக்கொள்ள முடிந்தால், அவர்களே மற்றவர்களுடன் பழக கற்றுக்கொடுப்பார்கள். அவர்களே திறனை கற்றுக்கொண்டதால் இது மேலும் சிறந்த முறையில் சமூக உறவில் ஈடுபட உதவும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வந்தாலும், பயிற்சி காலங்களில் பெற்றோர்களுடன் போதிய பயிற்சி இல்லாததால் ஆய்வு மூலமான பதிவுகள் இல்லை.