நான் பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் பிரபல நாடிகர்

நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் பேசும்போது கமல் பற்றி ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருந்த சிவராஜ் குமார் அடுத்து இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை தான் திருமணம் செய்து இருப்பேன் என அவர் கூறி இருக்கிறார்.

சிவராஜ் குமார் இப்படி பேசி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.