நடிகர் சந்தானம் ஹீரோவாக ஆன பின் காமெடியனாக நடிக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர்.
சமீபகாலமாக சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகிறது. அதுவும் சிம்பு படத்தில் காமெடியனாக வரப்போகிறார், அது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக திரையில் அமையும் என கூறப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த ஒரு அறிவிப்பையும் பார்க்கமுடியவில்லை.
இந்த நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் STR 49 படத்தில் சிம்பு காமெடியனாக நடிக்கவுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் காமெடியனாக நடிக்க ரூ. 13 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் சந்தானம். அதற்கு தயாரிப்பாளரும் சரி என கூறி ரூ. 7 கோடி முன்பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சந்தானம் இப்படத்தில் இணைந்ததற்கான அறிவிப்பு வெளிவரலாம் என்கின்றனர்.