நடிகர் சூரியின் புதிய பட அப்டேட்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடிக்க வைத்தது.

தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் வரும் மே 16ம் தேதி வெளிவர உள்ளது.
இந்நிலையில், நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ இப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.