உன்னிச்சைக்கு வரும் அதிகவளவான சுற்றுலாப் பயணிகள்!

கிழக்கு மாகாணத்தின் உன்னிச்சை நீர்த்தேக்கம் உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியத் தொடங்கியிருப்பதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உன்னிச்சைக் குளம் கடந்த காலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர் இடமாக திகழ்ந்திருந்தது.

தற்போதைய நிலையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உன்னிச்சைக் குளம் நோக்கிப் படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்பநிலையில் உன்னிச்சைக்குளத்தில் நீராடுவதில் உல்லாசப்பிரயாணிகள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

எனினும், உன்னிச்சைக் குளம் பிரதேசத்தை ஒரு சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.