ஏலவிற்பனைக்கு வரும் அரிதான நீலவைரம்

உலகின் மிக அரிதான நீலவைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம், மே 14 அன்று ஜெனீவாவில் ஏலம் விடப்பட இருக்கிறது.

இந்த வைரக்கல், நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இது முன்னர் இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்த சுரங்கங்கள் கோஹினூர் மற்றும் ஹோப் வைரங்கள் உட்பட உலகின் மிகவும் பிரபலமான வைரங்களில் சிலவற்றை உற்பத்தி செய்ததாக அறியப்படுகிறது.

இந்த அற்புதமான வைரக்கல் 35-50 மில்லியன் டொலர் விலைக்கு விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது