இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மத்துகமவில் டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கூர்மையான ஆயுதத்தால் இளம் பெண்ணின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்பது இன்னும் வெளியாகவில்லை.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் சுமார் 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மதுகம பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.