வெளிநாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது!

அநுராதபுரம் – ஹொரவ்பொத்தானை, பட்டியாவல பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் ஹொரவ்பொத்தானை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவ்பொத்தானை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பட்டியாவல பரங்கியாவாட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் என அபொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.