தபால் மூல வாக்களர்களுக்கு விசேட அறிவிப்பு!

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு உங்கள் தபால் மூல வாக்கைப் பதிவு செய்ய, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி,

தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை. தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் சரிபார்ப்புக் கடிதம்.

பின்வரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மட்டுமே இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.