ரீ ரிலீஸில் வசூலை வாரிக்குவிக்கும் சச்சின்.

தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வந்துள்ளது. அதில் சில கதைகள் மட்டும் என்றுமே நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடிக்கும்.

அப்படி நம் மனதில் இடம்பிடித்த காதல் கதைகளில் ஒன்று தான் தளபதி விஜய்யின் சச்சின். இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

2005ம் ஆண்டு வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என திரை வட்டாரத்தில் கூறுவதுண்டு.

ஆனால் தற்போது ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.ஆம், 20 ஆண்டுகள் கழித்து இப்படத்தை தயாரிப்பாளர் தாணு கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்தார்.

இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் சச்சின் படம் இதுவரை ரூ. 6.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.