கொழும்பு கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆண்டியம்பலம் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.