கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி?

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

அடிக்கிற வெயிலில் வீட்டில் குளிர்ச்சியான உணவினை தயாரித்து உண்பது எல்லோரது விருப்பமாக இருக்கிறது. அப்படி, மோரில் கத்தரிக்காயைப்போட்டு செய்யும் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்பதை அறிந்துகொள்ளலாம்.

கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 ஸ்பூன்,
கடுகு – அரை ஸ்பூன்,
உளுந்து – அரை ஸ்பூன்,
வரமிளகாய் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு
கீறிய பச்சை மிளகாய் – 1,
சின்ன வெங்காயம் நறுக்கியது – 10,
தக்காளி – அரை நறுக்கியது,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
கத்தரிக்காய் – 200 கிராம்,

கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:
சீரகம் – அரை ஸ்பூன்,
இஞ்சித்துண்டு – 1,
பூண்டு – 1 பல்,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய் – அரைமுடி,
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்,
பச்சரிசி – அரை ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
மோர் – 5 டம்ளர்

கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்முறை:-

ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம். அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, வரமிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் – 1, சின்ன வெங்காயம் நறுக்கியது – 10, தக்காளி – அரை நறுக்கியது இவற்றையெல்லாம் போட்டுக் கிளறிவிடவும். கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு, நன்கு வதக்கிக்கலாம். 200 கிராம் கத்தரிக்காயை நான்கு புறமும் கீறி வாணலியில் போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், ஒரு இஞ்சித்துண்டு, பூண்டு ஒரு பல், 3 பச்சை மிளகாய் போட்டுக்கலாம். பின் துருவிய அரைமுடி தேங்காயைப் போட்டுக்கலாம். பின் ஊறவைத்த ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, அரை ஸ்பூன் பச்சரிசியைப் போட்டு நன்கு அரைத்து விட்டு, அதில் சேர்த்துக்கொள்ளலாம். கிளறிக்கொண்டே இருந்தால் அடிபிடிக்காது.

பச்சை வாசம்போகும் வரை நன்கு கொதிக்கவைத்துவிட்டு, அதில் மோரை ஊற்றிவிடுங்கள். நன்கு நுரை கட்டி வரவேண்டும். அப்போது, அதன்மேல் கொத்தமல்லியையும், பெருங்காயத்தூளையும் போட்டுவிட்டு இறக்கவும். இப்போது சுவையான கத்தரிக்காய் மோர்க்குழம்பு தயார்!