தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டிருந்த முன்னணி நடிகை த்ரிஷா. சமீபத்தில் இவர் அஜித்துடன் இணைந்து நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சிம்புவுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.
பொதுவாக ஒரு மொழியில் படம் ஹிட் கொடுத்தால் அதை மற்ற மொழியில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், த்ரிஷா நடிப்பில் வெளியான ஒரு படம் ஒன்பது முறை ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அந்த படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார்.
அந்த படம் தான் ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தானா’ கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படம் தான் தமிழில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டன. தமிழில் மட்டுமின்றி இப்படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.