தமிழக காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணின் கணவரை பெண் பொலிஸ் இரண்டாவது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வக்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லதா காவல் நிலையத்தில் ராதிகா என்ற பெண் பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ராதிகா வழக்கு குறித்து சிங்கப்பூரில் உள்ள செல்வக்குமாரிடம் போனில் பேச நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி நாடு திரும்பிய செல்வக்குமார், 28ம் திகதி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இதை அறிந்த லதா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவாக உள்ள ராதிகாவை தேடிவருகின்றனர். ராதிகா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.