பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது நாம் செய்ய வேண்டியவை

குழந்தைகளுடன் பயணம் செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் இதோ

குழந்தை பிறந்து 2 வாரங்களாவது இருக்க வேண்டும்.

குழந்தையுடன் விமான நிலையத்தில் பயணம் செய்ய சில குறிப்பீடுகள் உள்ளன.

 

ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும், எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்ததில் பிரச்சனை, அதாவது குறைப்பிரசவம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் விமானத்தில் பயணம் செய்யும் போது விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விமானத்தில் பயணிக்கும் போது குழந்தையின் காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால் குழந்தை மிகவும் சந்தோஷமாக பயணிக்கும்.

ஆனால் குழந்தைக்கு தேவையான மருத்து, ஆடை, நாப்கின்கன் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

காரில் பயணம் செய்வதென்றால் பேபி கார் ஷீட் பயன்படுத்துவது நல்லது.

குழந்தையை சூரிய கதிர் படும்படி வைக்க வேண்டாம்.

சூரிய கதிர்கள் பட்டால் சருமம், கண்ணிற்கு பிரச்சனை வருவதோடு, உடல் வறட்சியை உண்டாக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், ரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.