ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் இலங்கை விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.
நவம்பர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குறித்தும், ஆராயப்படவுள்ளது. வரும் 15, 16ஆம் திகதிகளில், இந்த நாட்டு நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.
இந்தக் கூட்டத்தின் முடிவில், நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர நிபுணர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கியதுமான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவில் இடம்பெற்றுள்ள 10 சுததந்திர நிபுணர்கள், இந்தக் கூட்டத்தில் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.