ரத்தமானது சுத்தமாக இருந்தால் தான் மற்ற உடல் உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை பெற்று உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் கற்றாழை, அன்னாசிப் பழம், எலுமிச்சை மற்றும் புதினா போன்ற பொருட்களைக் கொண்டு ஜூஸ் செய்து சாப்பிட்டால், நமது உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் சுத்தமாகவும் வைக்கிறது.
தேவையான பொருட்கள்
- அன்னாசி பழச்சாறு – 1 டம்ளர்
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை – 1
- புதினா – சிறிதளவு
- தண்ணீர் – 1/2 கப்
செய்முறை
முதலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் அன்னாசிப் பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.
ஜூஸின் நன்மைகள்
- கற்றாழை அல்கலைன் தன்மை கொண்டதால், இது உடலைப் புத்துணர்ச்சி அடையச் செய்து, செரிமான மண்டலத்தை சீராக்கி, குடலியக்கப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- இரத்தத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேறச் செய்து, சிறுநீரகங்களில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.
- கற்றாழை அன்னாசி பழம் இந்த ஜூஸில் கலந்து இருப்பதால், நமது உடம்பின் உட்காயங்களைக் குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.