கைப்பேசி இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அறிதாகிவிட்டது. உங்களின்பெயர் என்ன என்பதைவிட உங்கள் கைப்பேசி எண் என்ன? என்பதை கேட்கதான் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் தற்போது, “உன் நண்பனை பற்றி சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்“ என்பதைப்போல, ஒருவரின் கைப்பேசியை வாங்கி ஆராய்ந்தாலே அவரின் குணாதிசியங்களை தெரிந்துகொள்ளலாம்.
ஆமாங்க வாட்ஸ் அப்புல என்ன போஸ்டிங் போட்றாரு, என்னமாதிரி மெசேஜ்களை பார்வேர்ட் பண்றாரு, என்னென்னமாதிரி போட்டோக்களையெல்லாம் எடுத்து காலரியில போட்டு வச்சிருக்காரு, மொபைல் கேமராவில் என்ன போட்டு எடுத்திருக்கிறாரு, கால் லாக்கை பார்க்கும்போது யாரு கூடவெல்லாம் அதிக தடவை பேசியிருக்காரு, அதிக நேரம் பேசியிருக்கிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாமே. இதுபோதாதாங்க ஒருத்தரைப்பத்தி தெரிஞ்சிக்க. எனவே மக்களே உஷார். உங்கள் கைப்பேசி கைமாறி சிலமணிநேரம் யாரிடமாவது இருந்தால் உங்கள் ஜாதகம் அவரிடம் ஜாக்கிரதை.
புதுசா செல்போன் வாங்க வேண்டுமான்னு கேட்டுட்டு ஏதேதோ பேசுவதுபோல் தோணுதா? மேற்படி விஷயங்கள் எல்லாம். தெளிவாக தெரிந்தால்தான் நமக்கு என்னமாதிரி கைப்பேசி தேவை என்பதை முடிவு செய்ய முடியும். ஒருநாளைக்கு நாம் எவ்வளவு நேரம் கைப்பேசியில் பேசுகின்றோம்? சமூக வளைதளங்களில் எத்தனைமணிநேரம் இருக்கின்றோம்? கைப்பேசி கேமராவை எவ்வளவு உபயோகிக்கிறோம்? இதெல்லாம் கைப்பேசி வாங்கும்போது யோசிக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
2GB RAM, குறைந்தபட்சம் 16GB நினைவகம், பத்துமணிநேரமாவது தாங்கும் பாட்டரி, 5 அங்குளமாவது திரை இருத்தல் வேண்டும். நவின மென்பொருள் இயங்குதளம் அதாங்க, லேட்டஸ் OS (operating system), எளிதில் கீறல் விழாத கண்ணாடி, முடிந்தால் மெட்டல் பாடி, இப்படி ஒரு கைப்பேசி, கையில் இருந்தால்தான் நாம்மால் வேண்டியபடி உபயோகிக்க முடியும். அதையும் தாண்டி, தொலைப்பேசி சேவை நிறுவனங் களின் சேவையில் 3G கனக்ஷனா,4நி கனக்ஷனா என்பதைவிட இப்போது 5G யை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.
மேற்படி செல் போன் சில பிராண்டுகளில் சுமார் எட்டாயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. முன்னணி பிராண்டுகளில் லட்சத்தை நெருங்கி செல்கிறது.