அஜித் நடித்த ‘வேதாளம்’ கடந்த வருட தீபாவளியையொட்டி நவம்பவர் 10-ஆம் தேதி வெளியானது. பாக்ஸ் ஆஃபீசில் பெரும் வசூல் குவித்த இப்படம் வெளியாகி வருகிற 10ஆம் தேதி ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் விதமாக தல ரசிகர்களுக்காக வேதாளம் படத்தை இம்மாதம் 10-ஆம் தேதி சென்னை ரோகிணி திரையரங்களில் திரையிடப்படுகிறது. இது தல ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்! இந்த தீபாவளியை முன்னிட்டி ரஜினிகாந்தின், ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’ முதலான படங்கள் சில தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்த வரிசையில் இப்போது அஜித்தின் ‘வேதாளம்’ படமும் மறு வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. சிவா இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.