தன்னுடயை 90 வயதிலும் உற்சாகமாக குதிரை சவாரி செய்வதை பிரித்தானியா ராணி இரண்டாம் எலிசபெத் வழக்கமாக கொண்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய நான்கு வயதிலிருந்தே குதிரை சவாரி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த பழக்கம் இன்று அவரின் 90 வயதிலும் தொய்வில்லாமல் தொடர்கிறது.
இங்கிலாந்தில் உள்ள Datchet என்னும் இடத்தில் தான் ஒரு குதிரையிலும், குதிரைகளை பராமரிக்கும் மேலாண்மை அதிகாரி Terry Pendry இன்னொரு குதிரையிலும் சாவகாசமாக நேற்று பயணம் செய்தார்கள்.
ராணி எலிசபெத்துக்கு குதிரை சவாரி செய்யும் போது தலை கவசம் அணியும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்ததில்லை.
முன்பு அதிக நேரம் குதிரை சவாரி செய்வதற்காக தன் நேரத்தை செலவிட்டு வந்த எலிசபெத் சில வருடங்களுக்கு முன்னர் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் இப்போதெல்லாம் குறைந்த நேரத்தையே இதற்கு செலவிடுகிறார்.
இந்த வயதிலும் குதிரை சவாரி செய்வதை பற்றி ராணி இரண்டாம் எலிசெபெத் கூறுகையில், நான் குதிரை சவாரி செய்யும் பழக்கத்தை என்றும் விட்டதில்லை.
ஆனாலும் இப்போதெல்லாம் வானிலை நன்றாக இருக்கும் போது மட்டுமே இதை செய்கிறேன்.
மோசமான குளிர் வானிலையில் குதிரை சவாரி மேற்கொண்டால் ஜலதோஷம், சளி பிரச்சனைகள் எனக்கு ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.