2009ஆம் ஆண்டு இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் வெலிசறை கடற்படை அதிகாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் துறையினர், இன்று இது தொடர்பிலான முழுமை அறிக்கையை கோட்டை மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஷ் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.
வடிவேல் பக்கிரிசாமி மற்றும் ரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இனந்தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு துறையினர்,
குறித்த இருவரும் பயங்கரவாத நடவடிக்கைகளிலோ அதற்கு உதவியாகவோ செயற்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்தே வெலிசறை கடற்படை அதிகாரிகள் இதில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக நீதவான் அதிரடியாக அறிவித்துள்ளார்.