இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட குவியலில் சிக்கி உயிருக்கு போராடிய நாயை மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.
Norcia நகரத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடம் சரிந்து விழ நாய் குவியலுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடி வந்துள்ளது.
குறித்த வீடியோவில், கட்டிட குவியலில் சிக்கி போராடும் நாயை கண்டறிந்த மீட்பு குழுவினர், விரைவாக நாயை மீட்டு உணவு அளிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 6.5 நிலநடுக்கம் இத்தாலியை தாக்கியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் பல மடங்கு பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த நபர் ஒருவர் பாதிப்புகளை வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், முக்கிய சாலை ஒன்று நிலநடுக்கத்தினால் பயங்கரமாக சேதமடைந்துள்ளது.
மேலும், மலையிலிருந்து பாறைகள் உருண்டு சாலையில் நிரம்பியிருக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.