ஸ்கொட்லாந்து நாட்டில் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவ பிரபல ஹொலிவுட் நடிகரான லியானர்டோ டிகாப்ரியோ ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து நாட்டில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் 30,000 பேர் வீடு மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை தொடர்ந்து ‘டைட்டானிக்’ புகழ் லியானர்டோ டிகாப்ரியோ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘வீடு மற்றும் உணவு இல்லாத ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு எனது ரசிகர்களும் பொதுமக்களும் 6 டொலர் அன்பளிப்பாக கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு சன்மானம் கொடுப்பவர்களில் இறுதியாக ஒருவரை தெரிவு செய்து அவர் என்னுடன் மதிய உணவு அருந்தலாம்’ என லியானர்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து நாட்டில் உள்ள Home என்ற உணவகம் வீடு மற்றும் உணவு இல்லாத நபர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 4,89,000 டொலர் நிதி வசூல் செய்து அவ்வாண்டு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு உணவு அளித்து வறுமையை போக்கியுள்ளது.
இதேபோல், இந்த ஆண்டும் இதுபோன்ற ஏழைகளுக்கு உதவ ஹோம் முன் வந்துள்ளது.
இறுதியில் தெரிவு செய்யப்படும் நபர் லியானர்டோ டிகாப்ரியோவுடன் உணவு அருந்துவது மட்டுமில்லாமல், அவர் George Hotel என்ற நட்சத்திர ஹொட்டலில் ஓர் இரவு முழுவதும் தங்களாம்.
மேலும், 1,200 மதிப்புள்ள ஷாம்பெய்ன் மது பாட்டிலும் அவருக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 11-ம் திகதி இறுதியாக வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.