ஒரு ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள சார்ஜை மெயிண்டன் செய்வது. பலமுறை சார்ஜ் செய்ய மறந்துவிட்டு குறைந்த சார்ஜுடனோ அல்லது சார்ஜையும் சேர்த்து எடுத்து கொண்டு செல்லும் நிலையோ ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும்
தற்போதைய நவீன ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் செய்யப்படும்போது முழுவதும் சார்ஜ் ஆன பின்னர் ஆட்டோமெட்டிக்காக மின்சாரத்தை அதில் உள்ள ஆப்சன் நிறுத்திவிடும் என்றாலும் 100% சார்ஜ் ஆனவுடன் பிளக்கை எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். ஆனால் 100% சார்ஜ் ஆகிவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அவ்வபோது பார்த்து கொண்டே இருக்க முடியுமா? இதற்குத்தான் 100% சார்ஜ் ஆனவுடன் நம்மை உஷார் படுத்த ஒருசில ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஐந்து ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்.
புல் பேட்டரி & தெஃப்ட் அலாரம் (Full Battery & Theft Alarm)
பேட்டரி சார்ஜ் ஆகி முடிந்ததை உஷார் செய்யும் ஆப்ஸ்களில் மிக முக்கியமானது இந்த வகை ஆப். அதுமட்டுமின்றி நமது ஸ்மார்ட்போன் திருடு போகும்போது நம்மை உஷார் படுத்தி நமக்கு நன்மையை செய்யும். 16.4 எம்பி மட்டுமே உள்ளதால் இந்த ஆப்-ஐ நீங்கள் எளிதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு அதை எனேபிள் செய்துவிட்டால் போதும். உங்கள் மொபைல்போன் 100% சார்ஜ் ஆனவுடன் அலாரம் அடுத்து உங்களை உஷார் படுத்தும். அலாரம் அடிக்கும் போது ஸ்டாப் அலாரம் பட்டனை க்ளிக் செய்துவிடால் போதும். உடனே அலாரம் நின்றுவிடும்
பேட்டரி 100% அலாரம்: (Battery 100% Alarm)
இந்த பேட்டரி 100% அலாரம் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களுடைய ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகி முடிந்த பின்னர் உங்கள் மொபைல் போனில் நோட்டிபிகேஷன் காண்பிக்கும். அதில் இருந்தே சார்ஜ் புல் ஆகிவிட்டதை அறிந்து கொள்ளலாம். அதேபோல் சார்ஜ் புல் ஆனவுடன் அலெர்ட் டோன் சவுண்டும் உங்களுக்கு கேட்கும்.
இந்த ஆப்-ல் அவ்வப்போது விளம்பரம் வந்து தொல்லை படுத்துவதாக நீங்கள் எண்ணினால் ரூ.60 கட்டணம் செய்தால் போதும், உங்களுக்கு விளம்பர தொந்தரவு இருக்காது. இந்த வசதியை நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்
பேட்டரி புல் அலாரம் (Battery Full Alarm)\
பேட்டரி புல் ஆகிவிட்டதை அறிவிக்கும் இன்னொரு வகையான ஆப்தான் இந்த பேட்டரி புல் அலாரம். இதில் நான்கு பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் நோட்டிபிகேஷனை டர்ன் ஆப் செய்வது, 100% ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆனவுடன் அலர்ட் செய்வது, அலர்ட் நோட்டொபிகேஷன் அனுப்புவது மற்றும் வைப்ரேஷன் வசதியை வைத்துக்கொள்வது அல்லது நிறுத்திக்கொள்வது என்பதே ஆகும். இந்த ஆப் வெறும் 5.95 எம்பி அளவே இருப்பதால் இதை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பேட்டரி எச்டி+ (Battery HD +)
இந்த ஆப், ஐபோன், ஐபாட் ஆகியவற்றுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது. இந்த ஆப் உங்களுக்கு சார்ஜை உஷார் படுத்துவது மட்டுமின்றி நீங்கள் அதிக நேரம் இண்டர்நெட் செய்வது, ரீசார்ஜ் செய்யாமல் இருப்பது, கேம்ஸ் விளையாடிவிட்டு அப்படியே மறந்துபோய் வைத்துவிடுவது, புத்தகம் படித்துவிட்டு மறந்துவிடுவது, நேவிகேஷனை க்ளோஸ் பண்ணாமல் இருப்பது, வீடியோ சேட்டிங்கை க்ளோஸ் செய்யாமல் மறந்துவிடுவது ஆகியவற்றையும் உஷார் படுத்தும்
புல் சார்ஜ் அலர்ட் ஆப்: (Full Charge Alert with Cydia)
இதுவும் iOSவகை போன்களுக்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ்களில் ஒன்று. இதன் மூலம் சார்ஜ் முழுமையாகிவிட்டால் உங்களுக்கு இசை மூலம் அதை அலர்ட் செய்யும். மேலும் விதவிதமான இசை ஆப்சன்கள் இதில் இருப்பதால் எந்த வகை இசை உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்தால் அந்த இசையில் உங்களை அலர்ட் செய்யும்