பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும். கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.
துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நீங்களும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது. இல்லற, வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லையே. எனவே, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்யாலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும்.
ஆண்களுக்கு இணையாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் அதே மன அழுத்தம், இதர உயரதிகாரிகள் தரும் குடைச்சல், தொந்தரவுகள் என பலவன இருக்கும்.
அவர்களும் அனைத்தையும் தாண்டி வேலை செய்து வருகிறார்கள் என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே தவறான கருத்து. பெண்களின் சுதந்திரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.