வீட்டிலேயே கிடைக்கும் எளிய மூலிகைகளை கொண்டு எப்படி முகப்பருபை வராமல் தடுக்கலாம்..?
* வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.
* பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின் மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும்.
* சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும்.
* கருந்துளசி இலைகளை பருக்களின் மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும்.
* புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
* ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.
* கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.