நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.

அதேப் போல் நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்ஸிஜனை சுவாசித்து சேகரித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகரித்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் பலப்படுத்த உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தான் அதிகம்
சளி, இருமல் போன்ற பொதுவான உடல் நல பிரச்சனையால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒருவருக்கு சளி நீண்ட நாட்கள் நீடித்திருந்தால், நுரையீரலில் சளியின் தேக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒரு நாளில் சளியின் உற்பத்தி
நம் உடல் ஒரு நாளில் 1-2 லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. அதில் பெரும்பாலானலை அவ்வப்போது வெளியேற்றப்பட்டுவிடும். ஒருவேளை ஒருவருக்கு சளி பிடித்தால், மூச்சுக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு, அது வேறுபல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சிலருக்கு சளியானது நீண்ட நாட்கள் நீடித்து, அந்த சளி பச்சை, மஞ்சள் நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால், உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்போது மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.

அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில் உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.

பானம் செய்ய தேவையான பொருட்கள்:
* தேன் – 100 கிராம்
* தண்ணீர் – 100 மிலி
* எலுமிச்சை சாறு – 4 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் – 50 கிராம்

செய்முறை:
* முதலில் ஓட்ஸை நீரில் ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு அதைக் குளிர வைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
குழந்தைகள் தான் அதிக அளவில் சளி பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். கண்டிப்பாக, இந்த பானத்தைக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு சளி பிரச்சனை முற்றிலும் நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

சளியை நீக்கும் வேறொரு வழி
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள் செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.