யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கலை பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று (02) அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் கூறியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வகுப்பு பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த மாதம் 20ஆம் திகதி உயிரிழந்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போது மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் அடையாளம் காணப்பட்டது.
இதனை அடுத்து இந்த மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் மாத்திரமின்றி அனைத்து சாராரும், சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில், வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.
மேலும், சந்திப்பின் போது ஏனைய தமிழர் தரப்பினர் பேச்சு