திருமணம் முடித்து 4 வருடங்களாக குழந்தை ஒன்றில்லை என்ற காரணத்தால் மனமுடைந்து காணப்பட்ட இளைஞர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் கலேவலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இப்பன்கட்டுவ, இந்தன்னொலுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மரணமடைந்தவரின் மனைவி பொலிஸாருக்குத் தெரிவிக்கையில் திருமனம் முடிந்து 4 வருடங்களாக தமக்கு ஒரு குழந்தை இல்லை என கணவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு.
அவரது வயது தற்போது 22 ஆகும். சம்பவ தினம் இரவு நான் சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது வீட்டுக் கூரை அதிரும் சத்தம் கேட்டு போய் பார்த்த போது சாரி ஒன்றினால் தூக்கிலிட்டு இருப்தைக் கண்டு ஓடிச்சென்று கத்தி ஒன்றைக் கொண்டு வந்து சாரியை வெட்டினேன்.
பின்னர் அயலவர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கணவரை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார் என்று தெரிவித்துள்ளார்.