எகிப்து பேரரசியான கிளியோபட்ரா வரலாற்று அழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.
கிளியோபட்ரா என்ற பெயரை கேட்டாலே அவருடைய அழகே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது.
அவள் அழகு இல்லாதவள் என்றும், அமைதியான ஒரு கவர்ச்சிப் பதுமை கிளியோபட்டரா எனவும் இருவேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அழகுக்கு அடுத்தபடியாக, ஆண்களை காதல் வலையில் வீழ்த்துவதில் கைதேர்ந்த மாயக்காரி ஆவார்.
14 வயதில் எகிப்திய பேரரசியாக அரியணை ஏறிய இவள், அந்நாட்டை மிகச்சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தாள்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்ததை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள், பேச்சாற்றலும் நிறைந்தவள்.
தனது 21 வயதில் ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி என்னும் இரு பெரும் ரோம ஆளுமைகளை காதல் வலை வீசி தன்வயப்படுத்தினாள்.
புத்திசாலித்தனமாக ஆட்சி புரிந்துவந்தாலும், கிளியோபட்ரா தனது மேனியழகை பேணிக்காப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தார்.
தன் அழகிய தோற்றம் மீது அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகின் ரகசியம்
தனது உடல் பளபளப்பாக இருப்பதற்காக கிளியோபட்ரா பால் மற்றும் தேனில் தான் குளிப்பாராம்.
தனது முகத்திற்கு தேன் வைத்து மசாஜ் செய்துகொள்வார்.
தனது கூரிய கண்களால் அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக, பல வண்ணங்கள் கொண்ட மைகளால் கண்களுக்கு அலங்காரம் செய்துகொள்வார்.
முத்துக்களை வினிகரில் கரைத்து குடித்துவந்தால், முத்து எப்படி மினுமினுப்பாக இருக்கிறதோ அதேபோன்று உடலும் மினுமினுப்பாக இருக்கும் என்பதற்காக இந்த முறையை பின்பற்றி வந்துள்ளார்.