காதலியை ஏமாற்றிய காதலன்: காதலி எடுத்த துணீகர முடிவு!

காதலியை ஏமாற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி செய்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் மனீஷ். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் மனீசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதால் நெருக்கமாக பழகியுள்ளனர். இது நாளைடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

காதலனை நம்பிய காதலி அவரின் பேச்சைக் கேட்டு அப்பகுதியின் அருகே உள்ள வாடகை வீட்டில் இருவரும் கணவன், மனைவி என்று பொய் கூறி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவரும் வேலைக்கு சென்று வந்த கால கட்டத்தில், சில தினங்களாகவே மனீஷ் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். காதலி தொலைபேசியில் முயன்றும் பேசவில்லை, அதன் பின் நண்பர்கள் உதவியுடன் அவரை தொடர்பு கொண்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த காதலி விசாரித்து பார்த்த போது மனீசுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பது தெரியவந்துள்ளது.

ஏமாற்றமடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்