மறைக்கப்பட்ட மஹிந்தவின் மறுபக்கம்! அம்பலமாகும் உண்மைகள்

இழந்த அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட மஹிந்த, தற்போது அதனை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டு, சுதந்திர கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் மற்றுமொரு தோல்வியை சந்திக்க நேரிடும் எனும் பயம் மஹிந்தவை ஆட்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மறைமுகமான ரீதியில் தனது காய்நகர்த்தல்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமகால அரசாங்கத்திற்கு எதிரான மாற்று அரசியல் சக்தி என்ற பெயரில் நேற்று புதிய அரசியல் கட்சியொன்று உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டமையின் ஊடாக செயற்படுத்துவதற்கு எதிர்பாரக்கும் அரசியல் திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரில் செயற்படும் இந்த கட்சியின் தலைவராக முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியின் பெயருக்கு பதிலாக புதிய கட்சியின் பெயரை பயன்படுத்துவதாக நேற்று தேர்தல் ஆணையாளரிடம், பீரிஸ் அறிவித்திருந்தார்.

இந்த கட்சியின் தலைவர் யார் என்பதனை வெளிப்படுத்தவில்லை என தகவல் வட்டாரங்கள் கூறிய போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே தலைவர் என தெரியவந்துள்ளது.

அந்த கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டு மக்களின் மற்றும் புதிய கட்சியின் கோரிக்கைக்கமைய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மஹிந்தவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக நாட்டு மக்களுக்கு காட்டுவதே இங்குள்ள ஒரு நோக்கமாகும்.

பின்னர் பாரிய மக்கள் கோரிக்கைக்கமைய தான் புதிய கட்சி தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதாக மஹிந்தவினால் அறிவிப்பு விடுப்பது இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகும்.

பின்னர் இனவாத குழுக்களாக அடையாளப்படுத்தும் நபர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் புதிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறி புதிய கட்சியை வலுப்படுவதற்கு இணைவதாக காட்டுவது இந்த நடவடிக்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.

குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய கூட்டு எதிர்க்கட்சியின் திட்டத்தின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சியின் தலைவராக இணைவதே திட்டம் என தெரியவந்துள்ளது.