தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பகழிக்கூத்தர், செந்தூர் முருகனை நினைத்து ‘திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்’ பாடினார். இதையடுத்து அவரது நோய் தீர்ந்தது.
வியாழ பகவான், இங்குள்ள முருகரை வழிபட்டு பேறு பெற்றார். இத்தல முருகப்பெருமானை வழிபட்டால் குரு தோஷம் அகலும்.
5 வயதாகியும் வாய்பேச முடியாமல் இருந்த குமரகுருபரர், திருச்செந்தூர் தலத்தில் 48 நாட்கள் தங்கியிருந்து முருகரை வழிபட்டார். இதையடுத்து அவருக்கு பேச்சுத்திறன் வந்தது.
இலை விபூதி பிரசாதம் :
செந்தில்நாதன் சன்னிதியில் வழிபடும் பக்தர் களுக்கு, ‘பன்னீர்செல்வம்’ என்னும் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையில் உள்ள 12 நரம்புகளும், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது. இந்த திருநீறு பிரசாதத்தை உடலில் பூசிக்கொண்டால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.