அமெரிக்காவில் உள்ள தெற்கு கேரோலினா மாநிலத்தில் புகழ்பெற்ற லேண்டர் பல்கலைகழகம் அமைந்துள்ளது.
அங்கு படிக்கும் இளம் மாணவி Sarah Thompson தன் வாழ்க்கையில் தனது பேராசிரியரால் நடந்துள்ள ஒரு நெகிழ்ச்சி நிகழ்வை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில், நான் என் கணவர் கிரிஸ்சுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன். இந்த நிலையில் நான் கர்ப்பமடைந்து சமீபத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெத்டுத்தேன். கைகுழந்தையை வைத்து கொண்டு எப்படி கல்லூரிக்கு செல்வது என குழப்பத்தில் இருந்தேன்.
அப்போது எனது கல்லூரி கணக்கு பேராசிரியர் Josie Ryan எனக்கு அருமையான விதத்தில் உதவி செய்தார். அதாவது அவர் என்னிடம், குழந்தையை காரணம் காட்டி உன் படிப்பை கெடுத்து கொள்ளாதே என கூறி குழந்தையை நான் படிக்கும் கல்லூரி வகுப்பறைக்குள் கொண்டு வர அனுமதி தந்தார்.
மேலும் பாடம் நடத்தி கொண்டே என் குழந்தையை கையில் வைத்து பார்த்தும் கொள்கிறார். இப்படி ஒரு ஆசிரியர் எனக்கு அமைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தை நான் பதிவிடுவதற்கு காரணம் இருக்கிறது.
அதாவது, குழந்தை பெற்ற தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் குழந்தையை காரணம் காட்டி படிப்பை நிறுத்த கூடாது, தன்னம்பிக்கையுடன் அதை தொடர வேண்டும் என Sarah தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.