இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் அருண்குமார் (22) இவருக்கு பிறக்கும் போதே கீழ் முதுகுக்கு பின்னால் உள்ள மூட்டுகளில் சரியாக வளர்ச்சியடையாத இரண்டு கால்கள் இருந்துள்ளன.
இதுபற்றி அருண்குமார் தந்தை ராம்சிங் கூறுகையில், என் மகன் அருண் பிறந்தவுடனேயே அவனுக்கு இந்த பிரச்சனை இருப்பதை தெரிந்து கொண்டு பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றோம். ஆனால் இதை சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் அப்போது கூறிவிட்டனர்.
எங்கள் கிராமத்திலும், அவன் இப்படியே இருந்துவிட்டு போகட்டும் என கூறிவிட்டதால் அப்படியே விட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
சிறு வயதுலிருந்து நான்கு கால்களுடன் வாழ்ந்து வரும் அருண்குமார் கூறுகையில், நான் இந்த பிரச்சனையால் சிறு வயதிலிருந்து பல அவமானங்களை சந்தித்துள்ளேன். என் பிரச்சனையை தற்போது சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்தேன்.
புது டெல்லியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையிலிருந்து என்னை அணுகினார்கள்.
நான் அங்கு சென்றவுடன் என் உடலை பரிசோதனை செய்தார்கள். சீக்கிரம் ஆப்ரேஷன் நடந்து என் இரு கால்கள் அகற்றப்பட்டு நானும் எல்லாரும் போல வாழுவேன் என நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் அருண்குமாரை சோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு நான்கு கால்கள் உள்ளதால் இரத்த ஒட்டம் எங்கிருந்து பாய்கிறது என பரிசோதித்து வருகிறோம் மற்றும் அவருக்கு கூடுதலான சிறுநீரகம், சிறுநீரகப்பை இருக்கிறதா எனவும் பார்த்து வருகிறோம். அதன் பின்னர் தான் மேற்கொண்டு கூறமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.