பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான விஷேட பிரிவொன்று இன்று முதல் முறையாக காவற்துறை திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு 4 -ம் இலக்க குற்றத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சர் சாகலரத்நாயக்க மற்றும் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்படி இன்று முதல் அனைத்து காவற்துறை நிலையங்களிலும் இந்த விஷேட பிரிவு செயல்படவுள்ளது.