சிவனொளிபாத மலையின் குறித்த நிலப்பகுதி தனியாருக்கு சொந்தமாக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த ஆர்ப்பாட்டமானது கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படுகிறது.
சிவனொளிபாத மலையின் நிலப்பகுதியானது தனியாருக்கு சொந்தமாக்கப்பட்டது கலாச்சார சீர்கேட்டின் ஒரு அங்கமாகும்.
இவ்வாறான புனித இடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதை அரசாங்கம் மறைத்து விட்டது.
மேலும் இவ்வாறான நடவடிக்கையினால் சூழலின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன் இந்த விடயத்திற்கு அரசாங்கமே முக்கிய காரணமாகும் என்பதே மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஆதரவு வழங்கப்போவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.