பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அக்கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஷ்புவின் கருத்து காங்கிரசின் கருத்தல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் அளித்தார்.
ஆனாலும், தமிழக காங்கிரசில், குஷ்புவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு விரோதமாக அவர் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து குஷ்புவிடம் மேலிடம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் போது, ‘நான் பொது சிவில் சட்டத்தை வரவேற்பது போல பேசவில்லை. இஸ்லாம் மதத்தில் உள்ள, ‘முத்தலிக்’ முறை, பெண் உரிமையை பாதிக்கும் செயல் என்று தான் கூறினேன் என தனது சார்பில் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இவரது கருத்தை மேலிடம் ஏற்காத காரணத்தால், விரைவில் குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.