தென்னாசியாவில் முதலிடம் பிடித்த இலங்கை..! எந்த விடயத்தில் தெரியுமா…?

தென் ஆசிய நாடுகளில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையர்கள் அதிகளவில் மது அருந்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா 2ஆம் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ஆம் இடத்திலுள்ளது.

இலங்கையர்களின் தலா மது பாவனை 3.03 லீற்றர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உலகில் அதிகளவில் மது அருந்துவோர் வரிசையில் பெலரஸ் பிரஜைகள் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.