பிரித்தானியாவில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் இளவரசி அணிந்திருந்த உடை அங்கிருந்த அனைவரையும் கண்கவர வைத்துள்ளது.
பிரித்தானியாவின் central London மாகாணத்தில் A Street Cat Named Bob என்ற திரைபடத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இப்படத்திற்கான காட்சிகள் காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரித்தானிய இளவரசி Catherine அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழா தொடங்குவதற்கு சற்று முன்னர் வந்த அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காரை விட்டு இறங்கிய உடனே பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்ய ஆரம்பித்தனர். அது மட்டுமில்லாமல் அவர் அணிந்திருந்த வெள்ளை நிற உடையைத் தான் பொதுமக்கள் அனைவரும் சுழன்று, சுழன்று புகைப்படம் எடுத்தனர்.
மிகவும் அழகாகவும், தன்னுடைய முடியை அவர் சரிசெய்ததும், அதன் பின்னர் பார்வையாளர்களை பார்த்து ஹாய் என்று கூறியதும், நுழைவு வாயிலே களைகட்டியது.
அதன் பின்னர் உள்ளே சென்ற அவர் இப்படத்தின் ஹீரோவான பூனைக்குட்டியை பாசத்துடன் தடவிக்கொடுத்ததும், அதன் பின்னர் அப்படம் பற்றி இயக்குனரிடம் விவாதித்தார். இவரது வருகையால் பிரித்தானியாவின் central London திருவிழா போல் இருந்தது.
மேலும், இப்படம் போதைக்கு அடிமையானவர்களை பூனை எப்படி மீட்கிறது போன்று படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவும் சூழ்நிலையில் இது போன்ற திரைப்படங்கள் பிரித்தானியாவில் வெளியிட்டால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதற்காக இளவரசி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர் அணிந்திருந்த உடையின் மதிப்பானது £320 பவுண்ட் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.