சுவிட்சர்லாந்தில் தொடங்கவுள்ள தேநீர் சாலையில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் விலை மாதுகளுக்கு பதிலாக பாலியல் ரோபோக்களை பயன்படுத்த குறித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குறித்த தேநீர் சாலை ஜெனிவாவில் இவ்வருட இறுதியில் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேநீருடன் பாலியல் ரீதியாகவும் மகிழ்விக்க வழிவகை செய்யப்பட்ட உள்ளது. இதற்கென்று பிரத்யேகமாக விலை மாதுக்கள் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் சுவிஸ் நிர்வாகம் குறித்த திட்டத்திற்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருவதால், விலை மாதுகளுக்கு பதிலாக பாலியல் ரோபோக்களை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு குறித்த நிறுவனம் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விடுதியில் தேநீர் அருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு விலை மாதுக்களை தெரிவு செய்ய பட்டியல் ஒன்றையும் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு கோப்பை தேநீருக்கு 60 பிராங்க் (இலங்கை ரூபாய் மதிப்பில் 9,128.75) கட்டணமாக முடிவு செய்துள்ளனர்.
குறித்த திட்டம் தற்போது தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் சுவிஸ் நாட்டு அதிகாரிகள் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி வணிகத்துறை இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குறித்த நிறுவனத்தின் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழில் சுவிஸில் சட்டப்பூர்வானது என்றாலும் பொது இடத்தில் உணவு விடுதிக்கென்று வழங்கப்பட்ட அனுமதியை முன்னிறுத்தி கட்டணமுறையில் பாலியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது .
அதிகாரிகள் தரப்பு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காதுள்ள நிலையில் குறித்த நிறுவனம் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பாலியல் பெண் ரோபோக்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.