தற்போது வரையில் நாடு பெற்றுக் கொண்டு கடன் தொகைக்கமைய சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாவிலும் 80 சதம் கடன் செலுத்த நேரிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை தொடர்பில் எந்த அரசியல்வாதி கருத்து வெளியிட்டாலும் எதிர்வரும் வருடத்தின் முழுமையான தவணை கடன் 4.4 பில்லியன் டொலர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 4.7 பில்லியன் டொலர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தேடும் நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.