திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமியர் ஒருவர் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததுடன் அது தனது மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமியர் ஒருவர் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததுடன் அது தனது மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை சேர்ந்தவர் அபூபக்கர். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் அதற்கு தாய்ப்பால் கொடுக்குமாறு அபூபக்கரின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அபூபக்கரோ தாய்ப்பால் எல்லாம் கொடுக்கவிட மாட்டேன். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என் மதத்திற்கு எதிரானது. மெக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட நீரும், தேனும் கொடுத்தால் போதுமானது என்று இஸ்லாமிய போதகர் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார் என்று அவர் மருத்துவர்களுடன் விவாதம் செய்தார்.
மேலும் தனது முதல் குழந்தைகக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க விட மாட்டேன் என்று கூறி மனைவி மற்றும் பிறந்த குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஐந்து நேர பாங்கு கூறிய பிறகு வேண்டுமானால் தாய்ப்பால் கொடுக்கலாம் என இஸ்லாமிய போதகர் தெரிவித்தாராம்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் ஒரு குழந்தையின் உரிமையை மறுக்கும் அபூபக்கர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.