சைத்தான் இசை வெளியீட்டின் சில துளிகள்!

விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இன்று அவர் நடித்து முடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது விஜய்யின் படிப்படியான வளர்ச்சியை எப்படி பார்த்து மகிழ்ச்சி அடைந்தெனோ அதேபோல் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

* இந்த படத்தின் கதை பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

* ‘சைத்தான்’ இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் சிபிராஜ் இந்த விழாவில் கலந்து கொண்டார்

* சைத்தான் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமை பெற்றுள்ள சிவகுமார் பேசியபோது, ‘பிச்சைக்காரன்’ போலவே இந்த படத்தையும் பிரமாண்டமாக தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

* தங்களுடைய ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிட்ட ‘இருமுகன்’, ‘தேவி’ படங்களை அடுத்து இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என்று ஆரோ சினிமாஸ் மகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.

* ‘பிச்சைக்காரன்’ இயக்குனர் சசி இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

* இந்த விழாவில் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் திரையிடப்பட்டது.