காதலர் தினத்திற்காக காத்திருக்கும் கார்த்தி – சிம்பு

காஷ்மோரா படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் ஆதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.

இப்படத்தின் பாடல்களை வருகிற 2017 ஜனவரியிலும், இப்படத்தை பிப்ரவரியில் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடவிருக்கிறார்களாம்.

இதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.