இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது.
இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடலாசிரியர் கவியரசு வைரமுத்து ‘பட்டைய கெளப்பு’ என்ற பாடலின் முழுப்பாடலின் வரிகளை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடலின் வரிகளை தற்போது பார்ப்போம்……
பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு
குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு
கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு
பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு
ஓ… கடலில் ரயிலும் போகும்
காசை எடு
இமயம்
கொஞ்சம் குனியும்
காசை எடு
பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? … ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு
கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு
பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே
எதிரி வந்தால்
மோதிப் பாக்கணுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே
நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு
தப்பாதப்பா
விஜயன் வில்லு
ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?
பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?